மேட்டுப்பாளையத்தில் சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்

மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசின் சொத்துவரி உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: தமிழ்நாடு அரசு அறிவித்த சொத்துவரி உயர்வை திரும்பப் பெற கோரி மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இரண்டாவது முறையாக 6 சதவிகித சொத்து வரியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபின் இரண்டாவது முறையாக சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், எனவே உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.



மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மேட்டுப்பாளையம் உதகை சாலையில் வரிசையாக நின்று கை கோர்த்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே 50 சதவிகிதம் வரி உயர்வு அறிவித்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக 6 சதவிகிதம் வரி உயர்வுகளை அறிவித்து மக்கள் மீது சுமை ஏற்றி வரும் திமுக அரசைக் கண்டித்தும், மின்கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் போன்ற பல்வேறு வரி உயர்வைக் கண்டித்தும் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அம்மா பேரவை செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் பி.டி கந்தசாமி மற்றும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட அதிமுகவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...