தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்புக்கு மட்டுமே வரியில்லை - பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சனம்

பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக அரசின் வரி உயர்வுகளை கடுமையாக விமர்சித்தார்.


Coimbatore: பொள்ளாச்சியில் அக்டோபர் 8 அன்று, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்தில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பல அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.



போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைத் தவிர வேறு எந்தத் திட்டங்களும் தற்போது செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். புதிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குடிநீர்த் திட்டங்கள் போன்ற எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அதிமுக ஆட்சியில் நடைமுறையில் இருந்த தாலிக்கு தங்கம், லேப்டாப் வழங்கும் திட்டம், ஆடு, கறவை மாடு, கோழி வழங்கும் திட்டம் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஜெயராமன் குறிப்பிட்டார். இத்திட்டங்கள் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தி வந்ததாகவும் அவர் கூறினார்.

"சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம், பால் விலை என அனைத்தும் உயர்த்தப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகளுக்கும் இறப்பவர்களுக்கும் மட்டுமே வரியில்லை. இதைத் தவிர மற்ற அனைத்து வரிகளையும் தமிழக அரசு உயர்த்திவிட்டது," என்று பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...