கோவையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிலான ஹேக்கத்தான் மற்றும் கண்காட்சி

கற்பகம் உயர்கல்வி அகாடமியில் அக்டோபர் 8, 9 தேதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதுமையான தொழில்நுட்ப உபகரணங்களின் கண்காட்சி மற்றும் தேசிய ஹேக்கத்தான் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


Coimbatore: கற்பகம் இனோவேஷன் மற்றும் இன்கியுபேஷன் கவுன்சில் (KIIC) மற்றும் கற்பகம் உயர்கல்வி அகாடமியின் (KAHE) உயிர்வேதியியல் பொறியியல் துறையின் இணைப்பில், "Impairathon" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஹேக்கத்தான் மற்றும் கண்காட்சி (Expo) ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வு உதவித் தொழில்நுட்பம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேவைகள் குறித்ததாகும்.


இந்த கூட்டாண்மையில் தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்துறை, Startup TN, STPI, TANCAM, கற்பகம் இனோவேஷன் சென்டர், Spastics Society of Tamil Nadu, Cognizant, Young Initiative Accessibility, Young Indians மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஆகிய முக்கிய பங்குதாரர்களும் இணைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒன்றிணைப்பதை Impairathon நோக்கமாகக் கொண்டுள்ளது.




ATA EXPO – 2024 (மாற்றுத்திறனாளிகளுக்கான புதுமையான மற்றும் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களின் மிகப்பெரிய கண்காட்சி) அக்டோபர் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில், கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்வி அகாடமியில் நடைபெறவுள்ளது. இதில் உதவித் தொழில்நுட்பங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தேவைக்கான சாதனங்கள் பெரும்பாலும் காட்சிப்படுத்தப்படும். இந்த நிகழ்வுடன் இணைந்து, தேசிய ஹேக்கத்தானின் Grand Finale க்கான நிகழ்வும் நடைபெறப் போகிறது.




இந்தியா முழுவதும் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன, இது புதுமை மற்றும் ஒத்துழைப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும். இந்த நிகழ்வில் முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும் அம்சம் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை வளமாக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.




இந்தியா முழுவதும் 295 யோசனைகள் இந்த ஹேக்கத்தானுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இது பங்கேற்பாளர்களின் படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இவற்றில் இருந்து 25 யோசனைகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.




இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைத்து சமுதாய மக்களையும் அன்புடன் அழைக்கிறோம். மாற்றுத் திறனாளிகளுக்கான புதுமையான தொழில்நுட்பங்களை நேரில் கண்டு தெரிந்து கொள்ளவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கவும் இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...