பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி: சார் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் என்ஜிஎம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.



கோவை: பொள்ளாச்சியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் என்ஜிஎம் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா துவக்கி வைத்தார்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் டாக்டர் மணிஷ் புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.



மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் மணிவண்ணன் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜதரங்கனி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.



இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள என்ஜிஎம் கல்லூரியில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



முன்னதாக மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை பொள்ளாச்சி கோட்ட காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு பாலக்காடு சாலை, கோவை சாலை வழியாக சென்று மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பெண்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான மார்பக புற்றுநோய் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் சுய பரிசோதனை செய்வதோடு, ஏதாவது அறிகுறி இருந்தால் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், டாக்டர் மனீஷ் கேன்சர் மையத்தில் நடைபெறும் மார்பக புற்றுநோய் இலவச பரிசோதனை முகாமை பெண்கள் முற்றிலும் பயன்படுத்திக் கொண்டு பயன் பெறலாம் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...