கோவை பார்க் குளோபல் பள்ளி மாணவர் சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்

கோவை பார்க் குளோபல் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த், குஜராத்தில் நடைபெற்ற சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரிதமிக் யோகாவில் தங்கப் பதக்கம் வென்றார்.


கோவை: கோவை பார்க் குளோபல் பள்ளி (சிபிஎஸ்இ) மாணவர் ஒருவர் சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

2024 அக்டோபர் முதல் வாரத்தில் குஜராத்தில் நடைபெற்ற 2024-2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேசிய யோகா போட்டியில் பார்க் குளோபல் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த் கலந்து கொண்டார். இப்போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரிதமிக் யோகாவில் தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த தேசிய அளவிலான போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 150 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 7ஆம் வகுப்பு மாணவர் ஹேமந்த் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பார்க் குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அனுஷா ரவி, இந்த சாதனையை படைத்த மாணவரையும், அவருக்கு பயிற்சி அளித்து ஊக்குவித்த பயிற்சியாளரையும் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...