வால்பாறையில் அதிமுக கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கட்சியினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மின்கட்டணம், கல்விக் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு மற்றும் நகராட்சி முறைகேடுகளை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சி அலுவலகம் முன்பு அதிமுக கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, நகரச் செயலாளர் மயில்கணேஷ்சன், தோட்டத் தொழிலாளர் பிரிவு தலைவர் V. அமீது ஆகியோர் தலைமை தாங்கினர்.

தமிழகத்தில் மின்சார கட்டணம், பள்ளி கல்வி கட்டணம், பால் விலை, சொத்து வரி ஆகியவற்றின் உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.



வால்பாறை நகராட்சி முறைகேடுகளை கண்டித்தும், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு, நகராட்சி கடை வாடகை அதிகரிப்பு, குடியிருப்பு சொத்து வரி உயர்வு ஆகியவற்றை எதிர்த்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் மக்கள் வளர்ச்சிப் பணிகள் செய்யப்படவில்லை என்றும், பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.



மேலும், குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்குகள் இயங்காததால் வனவிலங்குகளின் தொந்தரவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் சாலை வசதி செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

இந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...