பொள்ளாச்சி: தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தொடக்கம்; உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா கோரிக்கை

பொள்ளாச்சியில் சிதலமடைந்த தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை. சர்வீஸ் ரோடு ஆக்கிரமிப்பால் பள்ளி மாணவர்கள் சிரமம்.


கோவை: பொள்ளாச்சி, தேர்நிலையம் முதல் உஞ்சவேலம்பட்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை தென்மேற்கு பருவ மழையால் சிதலமடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்தது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



பொள்ளாச்சியில் உள்ள தாராபுரம் ரோடு மற்றும் உடுமலை ரோடு சந்திப்பு பகுதியான உஞ்சவேலம்பட்டியில் ரவுண்டானா அமைத்து தர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர். வாகனங்கள் தாராபுரம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும்போது, உடுமலையிலிருந்து வரும் வாகனங்கள் தெளிவாக தெரியாததால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உஞ்சவேலம்பட்டி அருகில் உள்ள தனியார் உணவகம் முன்பு சர்வீஸ் ரோட்டை ஆக்கிரமித்து கார்கள் வரிசை கட்டி நிற்பதால், அருகில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஏற்கெனவே இந்த சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...