திருப்பூர் வெடி விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி; பொதுமக்களும் கைகொடுப்பு

திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்த வெடி விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தங்குமிடம், உணவு வழங்கி உதவி. பொதுமக்களும் தன்னார்வமாக உதவி கரம் நீட்டினர்.


Coimbatore: திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நடந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி உதவிகளை வழங்கி வருகிறது. பொதுமக்களும் தன்னார்வமாக முன்வந்து உதவி செய்து வருகின்றனர்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் கார்த்தி என்பவரின் வீட்டில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில், அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் அங்கு வசித்த குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டது.



இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பிரித்துராஜ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். அதன்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் 30க்கும் மேற்பட்டவர்களை பாண்டியன் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு, உடை மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி பாதுகாப்பை உறுதி செய்தனர்.

சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றனர். பிற மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு மாற்று தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...