கோவையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை: பொதுமக்கள் குடைகளுடன் நடமாட்டம்

கோவையில் இன்று அக்டோபர் 8 ஆம் தேதி பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக பொதுமக்கள் குடைகளுடன் நடமாடுகின்றனர்.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்றைய தினம் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழையும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழையும் பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இன்று அக்டோபர் 8 ஆம் தேதி கோவை மாநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடைகளை பிடித்தவாறு நடந்து செல்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...