கோவை கோட்டைமேடு ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்: சால்னா கேட்டதற்காக இரண்டு நபர்கள் வன்முறை

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹோட்டலில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டதற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தினர். பலத்த காயமடைந்த அமானுல்லா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Coimbatore: கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள அபிதா ஹோட்டலில் புரோட்டாவுக்கு சால்னா கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது.

உக்கடம் ஜி.எம் நகரைச் சேர்ந்த கரீம் மற்றும் சமீர் ஆகியோர் அபிதா ஹோட்டலுக்கு உணவு உண்ண வந்தனர். அப்போது புரோட்டாவுக்கு சால்னா கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது, மீண்டும் வாக்குவாதம் முற்றி, இருவரும் அமானுல்லாவை கடுமையாக தாக்கினர்.



தாக்குதலின் போது அமானுல்லா தள்ளப்பட்டு அருகிலிருந்த போர்டில் விழுந்தார். இதனால் அவரது தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. மேலும், அவரது கண் மற்றும் இடுப்புப் பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, முதலில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் அமானுல்லா சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இப்பகுதியில் தினமும் மது போதையில் வரும் நபர்கள் இது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...