கோவை பன்னீர்மடையில் திருப்பதி பிரம்மோற்சவம் போல கருட சேவை: பக்தர்கள் திரண்டனர்

கோவை பன்னீர்மடையில் உள்ள மூன்று கோயில்களில் திருப்பதி பிரம்மோற்சவம் போன்று கருட சேவை நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டனர். பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடையில் அமைந்துள்ள மூன்று முக்கிய கோயில்களில் திருப்பதி பிரம்மோற்சவத்தை போன்று கருட சேவை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணசாமி திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் இந்த சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயிலில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை போன்று இங்கும் கருட சேவை நடத்தப்பட்டது.



முதலில் ஶ்ரீதேவி பூதேவி சமேதர உலகளந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெண் பக்தர்கள் கும்மியடித்தனர். பஜனை குழுவினரின் பாடல்களுடன் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

பன்னீர்மடை கிராமத்தின் முக்கிய வீதிகளில் பெருமாள் திருவீதி உலா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அப்போது பலத்த மழை பெய்தபோதிலும், பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் செல்வராஜ், செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர் டி.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் மேற்கொண்டிருந்தனர். நிர்வாகிகள் பி.டி.கோபாலசாமி, செல்வராஜ், தம்பி பாலகிருஷ்ணன், மோகன்ராஜ், ஜெயபால், பரணி, ஜெயசந்திரன், விஷ்வநாதன், பொன்னுசாமி, ராமசாமி ஆகியோரும் ஏற்பாடுகளில் உதவினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...