இளைஞர் வேலைவாய்ப்புக்காகவே முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் - மேட்டுப்பாளையத்தில் நீலகிரி எம்பி ஆ.ராசா பேச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையத்தில் ரூ.1.08 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் துவக்கி வைத்த நீலகிரி எம்பி ஆ.ராசா, முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீலகிரி எம்பியும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கலைஞர் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கான ஆணைகளையும் ஆ.ராசா வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்குத் தேவையான தொழிற்சாலைகள் போதிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை என்றார்.



"புதிய தொழிற்சாலைகளை தமிழகத்துக்குக் கொண்டு வந்து இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவே முதல்வர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்," என்று ஆ.ராசா தெரிவித்தார்.

மேலும், "தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் முறையாகச் செயல்படுகின்றனரா என உளவுத்துறை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மக்கள் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்த திமுக அரசு பாடுபடும்," என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பள்ளேபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார், திமுக ஒன்றியச் செயலாளர் சுரேந்திரன், எஸ்.எம்.டி கல்யாணசுந்தரம், டி.ஆர்.எஸ் சண்முகசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...