தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு அன்னூர் மாணவர் தேர்வு: தமிழக அணியில் இடம்பிடித்த ஸ்ரீ ரித்திக்

கோவை அன்னூர் அருகே உள்ள கிருஷ்ண கவுண்டன் புதூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீ ரித்திக், 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Coimbatore: கோவை நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்று வரும் அன்னூர் அருகே கிருஷ்ண கவுண்டன் புதூரைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீ ரித்திக், தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை நேரு விளையாட்டரங்கில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வரும் ஸ்ரீ ரித்திக், கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு ஆணையம் சார்பில், 2024-25ம் கல்வியாண்டுக்கான 14 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதற்கான மாநில அளவிலான வீரர்கள் தேர்வுப் போட்டி அண்மையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ ரித்திக், சிறப்பாக விளையாடி தமிழக அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தமிழகம் சார்பில் விளையாட உள்ளார்.

தமிழக அணிக்குத் தேர்வு பெற்ற ஸ்ரீ ரித்திக்குக்கு விளையாட்டு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...