உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்பர் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா

உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்தலப்பரின் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் தேவராட்டம் ஆடி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்ப நாயக்கரின் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட எத்தலப்பரின் முழு உருவ சிலையும், திருமூர்த்தி மலையில் அமைக்கப்பட்ட மணிமண்டபமும் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டன.



இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாரம்பரியமான தேவராட்டம் ஆடியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி மற்றும் பொதுமக்கள் பலர் எத்தலப்பர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுதந்திரப் போராட்ட வீரரின் முழு திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வீரபாண்டிய கட்டபொம்மன் கழகம் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை இதன் மூலம் நிறைவேறியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...