உடுமலை அருகே அரசு பேருந்து மோதி உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோனி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் குரு பிரசாத் (27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தும் பலன் இல்லாமல் போனது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தாந்தோனி பகுதியில் அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடுமலை அருகே உள்ள தாந்தோனி பகுதியில் தாராபுரம் சாலையில் இருந்து உடுமலையை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், உடுமலையில் இருந்து தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் குரு பிரசாத் (27) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்.



எதிர்பாராத விதமாக அரசு பேருந்து குரு பிரசாத்தின் இருசக்கர வாகனத்தை மோதியது. இதில் குரு பிரசாத் சுமார் 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குரு பிரசாத் ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், பேருந்து மோதிய வேகத்தில் ஹெல்மெட் உடைந்து போனதால் அவரால் உயிர் தப்ப முடியவில்லை.

உடுமலை அருகே தும்பலபட்டியைச் சேர்ந்த குரு பிரசாத்துக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...