உடுமலை அருகே மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய மின் பொறியாளர் கைது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரத்தில், விவசாய மின் இணைப்புக்கு ரூ.2000 லஞ்சம் கேட்ட உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரத்தில், விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொங்கல் நகரத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராமன், தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெற தட்கல் முறையில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், விண்ணப்பத்தின் பேரில் விவசாயி ஜெயராமனை அழைத்த கொங்கல் நகர உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து, மின் மீட்டர் பொருத்தி இணைப்பு தர ரூ.2000 லஞ்சமாக கேட்டுள்ளார்.



இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய ரூ.2000 பணத்தை உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்துவிடம் விவசாயி கொடுக்கும் போது, காத்திருந்த அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் சசிரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் லஞ்ச பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். உடுமலை அருகே விவசாய மின் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்ட இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...