கோவையில் ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் - சிறு வியாபாரிகள் கோரிக்கை

கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கம் ஆன்லைன் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைன் வர்த்தகம் சிறு வியாபாரிகளை பாதிப்பதாகவும், தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை: கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் நலச்சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சங்கத்தின் தலைவர் சின்னுசாமி, செயலாளர் பாரதிமோகன், அமைப்பாளர் இராமையா ஆகியோர் ஆன்லைன் பட்டாசு வர்த்தகத்தால் சிறு வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

அவர்கள் கூறியதாவது: "ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தும் ஆன்லைன் வர்த்தகம் நடைபெறுகிறது. இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் விற்பனையால் அரசுக்கு எந்த லாபமும் இல்லை. எனவே, அரசு ஆன்லைன் விற்பனையை தடை செய்ய வேண்டும்."

"ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் பட்டாசுகள் பாதுகாப்பில்லாமல் சாதாரண வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. தள்ளுபடி என்ற பெயரில் தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுகின்றன. சிவகாசியை மையமாகக் கொண்டு கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தரமற்ற பட்டாசுகள் விற்கப்படுகின்றன. இவ்வாறு விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டி பில் வழங்குவதில்லை. இதனால் பொதுமக்கள் புகார் அளிக்க முடியாத நிலை உள்ளது."

"உற்பத்தி உரிமம் இல்லாத நிறுவனங்களும், ஜிஎஸ்டி செலுத்தாதவர்களும் தான் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். ஆன்லைனில் விற்கப்படும் அனைத்து பட்டாசுகளும் தரமற்றவை. அரசு இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்."

மேலும் அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்:

1. வியாபார உரிமம் 10 நாட்களுக்கு பதிலாக 15 நாட்களாக நீட்டிக்கப்பட வேண்டும்.

2. பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

3. சரவெடியை பழைய முறைப்படி கெமிக்கல் கொண்டு தயாரிக்க அனுமதிக்க வேண்டும்.

இறுதியாக, "தீயணைப்புத் துறையின் அறிவுறுத்தலின்படி பட்டாசுகளை எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து பட்டாசு கடைகளிலும் நோட்டீஸ் வழங்க இருக்கிறோம். கடைகளில் பிளக்ஸ் ஒட்டி 'இந்த தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம்' என்று தெரிவிக்க உள்ளோம்" என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...