கோவை மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - பல பகுதிகளில் தொடர் மழை

கோவை மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காந்திபுரம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த ஒரு வாரமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அக்டோபர் 9 அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை காந்திபுரம், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், கோவைப்புதூர், உக்கடம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், சாய்பாபா காலனி, ரத்தினபுரி, சுந்தராபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேலும், ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...