காரமடை நகரில் நீலகிரி எம்பி ஆ.ராசா பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்

நீலகிரி எம்பி ஆ.ராசா காரமடை நகரில் பொதுக்கழிப்பிடம், பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும், தேர்தலில் ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.


கோவை: நீலகிரி எம்பி ஆ.ராசா காரமடை நகரில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அவர் தேர்தலில் தன்னை வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய கட்டமைப்புகளையும் திறந்து வைத்தார்.



காரமடை நகர கழகத்திற்குட்பட்ட பகுதிகளில், தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா நன்றி தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் தொண்டாமுத்தூர் ரவி, நகர செயலாளர் வெங்கடேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் T.R.சண்முகசுந்தரம், மாவட்ட அவை தலைவர் புருஷோத்தமன், காரமடை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சு.சுரேந்திரன் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



காரமடை நகராட்சி, வார்டு எண்-17, சாஸ்திரி நகர் பகுதியில் ரூபாய் 27.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய பொதுக்கழிப்பிட கட்டிடத்தை எம்பி ஆ.ராசா திறந்து வைத்தார்.



மேலும், வார்டு எண்-23 கார் ஸ்டேண்ட் அருகில் ரூபாய் 7.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.இரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், ஒன்றிய கழகச் செயலாளர்கள் SMT கல்யானசுந்தரம், சுரேந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...