மக்கள் மீது வரிச்சுமை இல்லை: அதிமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பதிலடி

பொள்ளாச்சி அருகே திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மக்கள் மீது திமுக அரசு வரிச்சுமை சுமத்தவில்லை என்று அதிமுக குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். அதிமுக ஆட்சியின் வரி உயர்வுகளை சுட்டிக்காட்டினார்.


Coimbatore: செய்தி, விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சியில் ரூ.3.79 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் புதிய தார் சாலைகள் அமைத்தல், குடிநீர் திட்டப் பணிகள் உள்ளிட்டவை அடங்கும்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அதிமுக தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். "திமுக அரசு மக்களை பாதிக்கக்கூடிய வகையில் எந்த வரி சுமையையும் சுமத்தவில்லை. இதை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் மனசாட்சியோடு உணர வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.



அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த வரி உயர்வுகளை சுட்டிக்காட்டிய அமைச்சர், "கடந்த அதிமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முட்டை நிறுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு, மின் மீட்டர் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது. இவற்றை எல்லாம் மக்கள் மறக்கவில்லை," என்று குறிப்பிட்டார்.

மேலும், திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களையும் அமைச்சர் எடுத்துரைத்தார். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் திமுக அரசின் நடவடிக்கைகளை அதிமுக தவறாக சித்தரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...