கோவை தெற்கு மண்டலத்தில் மேயர் தலைமையில் சிறப்பு தூய்மைப் பணி

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. குறிச்சி, கே.டி.எஸ். காலனி, ஆறுமுக மேஸ்திரி சந்து உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மண்டலத்தில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது. இந்த பணியை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் IAS முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

வார்டு எண் 85க்குட்பட்ட குறிச்சி, கே.டி.எஸ். காலனி, ஆறுமுக மேஸ்திரி சந்து ஆகிய பகுதிகளில் இந்த சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.



இந்த பணியில் சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளில் உள்ள கட்டிட இடிபாடு மண்களை அகற்றுதல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், டெங்கு தடுப்பு பணிகள், மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.



குறிப்பாக, சில்வர் ஜூப்ளி வீதி, வெங்கடாசலபதி நகர், எம்.எம்.வி நகர், காந்திஜி பிரதான சாலை, ரங்கப்பனடி வீதி, முனியப்பன் கோவில் சந்து, விநாயகர் கோவில் வீதி, பொங்காளி அம்மன் கோவில் முதல் திருவள்ளுவர் சிலை வரையிலான பகுதிகள், அழகு நகர், பாரதி நகர் சந்திப்பு வரையிலான பகுதிகளில் இந்த பணிகள் நடைபெற்றன.



மேலும், சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மின்சார கம்பிகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தேவையற்ற செடி கொடிகளை அகற்றுதல், களைச்செடிகளை அகற்றி சுத்தம் செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.



இந்நிகழ்வில் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் க.சிவகுமார், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, நகர்நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், சரளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...