அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வாழ்த்து

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.


Coimbatore: கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், மற்றும் இதர பணிகளை கண்காணிக்கவும், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களால், கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி.

தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான செந்தில்பாலாஜியை, அவரது சென்னை இல்லத்தில் இன்று (10-10-2024) சந்தித்த கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கோவை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் இருவரும் கலந்துரையாடினர் என தெரிகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...