திமுகவின் மூத்த தலைவர் முரசொலி செல்வம் காலமானார்; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திமுகவின் மூத்த தலைவரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் (84) அக்டோபர் 10 அன்று மாரடைப்பால் காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: திமுகவின் மூத்த தலைவரும், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான முரசொலி செல்வம் (84) அக்டோபர் 10 அன்று மாரடைப்பால் காலமானார்.

முரசொலி மாறனின் சகோதரரும், கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வம், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார். முரசொலியை திமுகவினரை தாண்டி, சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்த முரசொலி செல்வத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர், "என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தை தாக்கி வேதனை குருதியை வடிய செய்கிறது. கருணாநிதி மறைந்த பிறகு சாய்வதற்கு கிடைத்த கடைசித் தோளை இழந்து நிற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

திமுகவின் மூத்த தலைவரான முரசொலி செல்வத்தின் மறைவு கட்சியினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...