கோவை வேளாண் பல்கலையில் காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 16, 17 தேதிகளில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நடைபெறுகிறது. பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல்" குறித்த இரண்டு நாள் பயிற்சி வரும் அக்டோபர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த பயிற்சி ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இதில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார் நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார், தக்காளி கெட்சப் போன்றவற்றை தயாரிப்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணம் செலுத்தி, பயிற்சியின் முதல் நாளன்று தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் நடைபெறும்.

பங்கேற்பாளர்கள் வாயில் எண் 7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக வரலாம். மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள் 94885 18268, 04226611268 ஆகும். மின்னஞ்சல் முகவரி [email protected] என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...