கோவை மேற்கு மண்டலத்தில் 'மக்களைத்தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம் - ஆணையாளர் தொடங்கி வைத்தார்

கோவை மேற்கு மண்டலத்தில் 'மக்களைத்தேடி மாநகராட்சி' சிறப்பு முகாம் வடவள்ளி காமாட்சியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தலைமையில் பல்வேறு துறைகளின் சேவைகள் வழங்கப்பட்டன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண் 36ல் உள்ள வடவள்ளி ஸ்ரீ அருள்மிகு சக்தி காமாட்சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் "மக்களைத்தேடி மாநகராட்சி" சிறப்பு முகாம் இன்று (10.10.2024) நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மேற்கு மண்டலத்தின் 20 வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த முகாமில் வருவாய், பொறியியல், பொது சுகாதாரம் மற்றும் நகரமைப்பு பிரிவுகளின் சார்பில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன. சொத்துவரி, குடிநீர் இணைப்பு, தெரு விளக்கு, சாலை பராமரிப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ், குப்பை அகற்றுதல், கட்டிட அனுமதி போன்ற பல்வேறு சேவைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவாக தீர்வு காணப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணைகளும் வழங்கப்பட்டன. மாநகராட்சியின் சேவைகளை பெற்று பயன்பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.



இந்நிகழ்வில் துணை மேயர் ரா. வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் க. சிவகுமார், மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, நகரமைப்பு குழு தலைவர் சோமு (எ) சந்தோஷ், மாநகர தலைமைப் பொறியாளர் (பொ) முருகேசன், நகர்நல அலுவலர் மரு. கே. பூபதி, நகரமைப்பு அலுவலர் குமார், உதவி ஆணையர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...