கோவையில் ரூ.17.50 கோடி ஆன்லைன் மோசடி: இருவர் கைது; சவுரிபாளையத்தில் வாகனத்தில் பணம் திருடியவர் பிடிபட்டார்

கோவையில் ரூ.17.50 கோடி ஆன்லைன் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். சவுரிபாளையத்தில் வாகனத்தில் இருந்து ரூ.80,000 திருடிய நபர் கைது செய்யப்பட்டார். இரு சம்பவங்களும் அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடந்தன.


Coimbatore: கோவையில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.17.50 கோடி மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சவுரிபாளையத்தில் வாகனத்தில் இருந்து பணம் திருடிய நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன் உள்ளிட்ட மூவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து ரூ.50 லட்சம் ஏமாற்றப்பட்டதாக கடந்த செப்டம்பர் மாதம் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், இந்த மோசடி கும்பல் கம்போடியா, மலேசியா மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயங்கி வருவதும், இந்தியா முழுவதும் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இந்த மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்கு அளித்து உதவியதோடு, மோசடியிலும் தொடர்புடையதாக திருப்பூர், ராக்கியாபாளையம் பிரிவு ஜெய் நகர் பகுதியைச் சேர்ந்த கே.வேல்முருகன் (30) மற்றும் கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் எஸ்.அப்பாஸ் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் அக்டோபர் 9 புதன்கிழமை கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் இருவரும் ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் ரூ.17.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், கோவை சவுரிபாளையம் பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றவரின் வாகனத்தில் இருந்த 80 ஆயிரம் ரூபாயை திருடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இராமநாதபுரம் போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குன்னூரை சேர்ந்த 24 வயதான ரெபய் அகமது என்பவரை அக்டோபர் 10 கைது செய்தனர். அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...