ஆயுத பூஜையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளது. செவ்வந்தி, மல்லி, முல்லை உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.



Coimbatore: கோவை பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பூஜை செய்வதற்காக மக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர்.

தற்போதைய விலை நிலவரப்படி, செவ்வந்தி பூ கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும், மல்லி பூ கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரையும், முல்லை பூ கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரையும், அரளி பூ கிலோ ரூ.400, கோழி கொண்டை பூ கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரையும், ரோஜா பூ கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்பனையாகி வருகிறது.



பூக்களுடன் சேர்த்து வாழை கன்று ஜோடி ரூ.30, கரும்பு ஜோடி ரூ.150, மா இலை ரூ.30, பூசணிக்காய் கிலோ ரூ.40 என்ற விலையில் விற்பனையாகி வருகின்றன. பொரி, பழ வகைகள் உள்ளிட்டவைகளும் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

பூ வியாபாரி சங்கத்தின் துணைத் தலைவர் ஹக்கீம் கூறுகையில், "கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பூக்களின் விலை சற்று குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு அதிக மழை பெய்ததால் பூக்களின் வரத்து குறைந்திருந்தது. அதனால் அதிக விலைக்கு பூக்கள் விற்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாக இருந்ததால், பொதுவான விலையிலேயே பூக்கள் கிடைக்கின்றன," என்று தெரிவித்தார்.

பூ மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் நாளை நடைபெறும் ஆயுத பூஜைக்காக அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...