தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் காரமடை வனப்பகுதியில் விதைப் பந்துகளை வீசினர்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் காரமடை வனப்பகுதியில் 15,000க்கும் மேற்பட்ட விதைப் பந்துகளை வீசினர். இந்த நிகழ்வு உலக வனவிலங்கு வாரம் 2024ஐ முன்னிட்டு நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மாபெரும் விதைப்பந்து தயாரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.கீதாலட்சுமி தலைமையில் சுமார் 1000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு 15,000க்கும் மேற்பட்ட விதை பந்துகளை தயார் செய்தனர்.



இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 7 ஆம் தேதி, சுமார் 200 மாணவர்கள் காரமடை வனச்சரகத்திற்குச் சென்று தயாரிக்கப்பட்ட விதைப் பந்துகளை வனப்பகுதிக்குள் வீசினர். இந்த நிகழ்வு தமிழ்நாடு வனத்துறை, ITC-Limited மற்றும் COODU என்.ஜி.ஓ., காரமடை ஆகியவற்றின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.கீதாலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காரமடை வனச்சரக அலுவலர் ரஞ்சித் அவர்கள் விதைப்பந்துகளை வீசி மாணவர்களுக்கு வழிகாட்டினார்.



இந்த முயற்சி எதிர்காலத்தில் காடுகளின் பரப்பை மேம்படுத்தவும், வன நீர்நிலைகளின் நடத்தையை மேம்படுத்தவும், வனவிலங்குகளுக்கு தங்குமிடம் அளிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்வின் ஒரு பகுதியாக, வன சுற்றுச்சூழல் மற்றும் உயிர் பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்களுக்கு விளக்கக்காட்சி வழங்கும் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மையர் முனைவர் அ.ரவிராஜ் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.



உலக வனவிலங்கு வாரம் 2024ஐ முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விதை மையம், Eco Club, MasonA GE Club, Food Club, Rotaract Club, NSS ஆகியவற்றுடன் தமிழ்நாடு வனத்துறை, ITC-லிமிடெட், கோயம்புத்தூர் மற்றும் COODU NGO, காரமடை ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தன.

நிகழ்வில் உணவு செயல்முறை பொறியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பாலகிருஷ்ணன், கோயம்புத்தூர் ITC-லிமிடெட் திட்ட மேலாளர் தினேஷ் மற்றும் COODU NGO இயக்குனர் கதிரேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...