கோவை வேளாண் பல்கலையில் மருத்துவ தாவரங்கள் பயிற்சி: விவசாயிகள், தொழில் முனைவோருக்கு அழைப்பு

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 18ம் தேதி மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. விவசாயிகள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் துறை சார்பில் வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று "மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள்" குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியில் விவசாயிகள், பொதுமக்கள், அறிவியல் பட்டதாரிகள், நாற்றங்கால் உரிமையாளர்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் மகளிர் பங்கு கொண்டு பயனடையலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம், மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் முக்கியமான அங்கக சாகுபடி தொழில்நுட்பங்கள் தொடர்பான அறிவு மற்றும் திறன்களை பரப்புவதாகும். இதன் மூலம் தரமான நடவுப் பொருட்களுடன் உயர்தர மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதோடு, புதிய தொழில் முனைவோருக்கு நல்ல வருமானம் கிடைக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர முடியும்.

இந்தப் பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 1,000 ஆகும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் அக்டோபர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 98429-31296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...