இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது பாசனம், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலம்பாளையத்தில் உள்ள பூசாரி நாயக்கன் குளத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த குளம் 75 ஏக்கருக்கு மேல் பாசன வசதியை வழங்குவதுடன், பல கிராமங்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் பாசனம், குடிநீர் பற்றாக்குறை மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி, இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை, அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து, 20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும். இது பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும்.



தண்ணீர் திறப்பு நிகழ்வில் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, திறக்கப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் பேசிய எம்பி ஈஸ்வரன், "இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் சாமிநாதன், திட்டக்குழு தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத்தினரின் முயற்சியால் தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கான அரசு என்பதற்கு இது ஒரு சான்றாகும்" என்றார்.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை இளம் செயற்பொறியாளர் விஜயசேகரன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், பூசாரி நாயக்கன் குளம் பாசன சபை நிர்வாகிகள் காளிமுத்து, மாடர்ன் மகாலிங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...