பொள்ளாச்சி அருகே கேரள சுற்றுலா வாகனம் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 13 பயணிகள்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை பகுதியில் கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாடு பெரும் உயிர்ச்சேதத்தை தவிர்த்தது.



கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியாறு à®®à¯à®¤à®²à¯ கொண்டை ஊசி வளைவு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 13 சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காடு ஓட்டப்பாலம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர், குழந்தைகளுடன் சுற்றுலாவிற்காக பொள்ளாச்சி வந்துள்ளனர்.

இக்குழுவினர் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் கேரளா செல்வதற்காக வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி சாலையில் பயணித்துள்ளனர். இந்த நேரத்தில், அவர்கள் பயணித்த வாகனத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.



இதனால் வாகனம் சாலையின் ஓரத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.



வாகனத்தின் பழுதை கவனித்த வாகன ஓட்டுனர் லாவகமாக வாகனத்தை கையாண்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. எதிர்பாராமல் நடைபெற்ற இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்த தகவல் அறிந்த உடன் அப்பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...