சூலூரில் கடத்தப்பட்ட இரண்டு மாணவிகள் மும்பையில் இருந்து மீட்பு: இரு வடமாநில இளைஞர்கள் கைது

கோவை சூலூரில் கடத்தப்பட்ட இரண்டு 11ஆம் வகுப்பு மாணவிகள் மும்பையில் இருந்து மீட்கப்பட்டனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளியில் படிக்கும் இரண்டு 11ஆம் வகுப்பு மாணவிகள் கடத்தப்பட்டு மும்பையில் இருந்து மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இரு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சூலூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் கடந்த வாரம் பள்ளியில் நடைபெறும் சிறப்பு வகுப்புக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து கிளம்பினர். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இரவு நேரமாகியும் மாணவிகள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், தோழிகள் மற்றும் உறவினர் வீடுகள் என பல இடங்களில் தேடினர்.

மாணவிகளைக் காணவில்லை என்பதால் பெற்றோர் சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுமதி உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்குத் தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டிஎஸ்பி தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது.

மாணவிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரிக்கும்போது, அவர்களை கடத்திய மனோஜ் குமார் மற்றும் சாய் கியான் ஆகியோர் மும்பையில் இருப்பது தெரிய வந்தது. மும்பை போலீசாரின் உதவியோடு காவல்துறையினர் மாணவிகளை மீட்டு சூலூருக்கு அழைத்து வந்தனர்.

விசாரணைக்குப் பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (அக்டோபர் 10) கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மாணவிகளின் வீட்டின் அருகே வடமாநில வாலிபர்கள் சிலர் தங்கி இருந்ததாகவும், அவர்கள் கேட்டரிங் மற்றும் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...