கோவை தொப்பம்பட்டியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆயுத பூஜை விழா

கோவை தொப்பம்பட்டி பகுதியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.



Coimbatore: கோவை தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படும் நிலையில், கோவை தொப்பம்பட்டி பகுதியில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஸ்டேண்ட் சார்பாக ஆட்டோக்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.



இந்த நிகழ்வில், ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு, மாலை, வாழைக்கம்பம், கரும்பு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டன. மேலும், திருநீறு, சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டதுடன், சாமி படங்களும் பூஜைப் பொருட்களும் வைக்கப்பட்டன. ஆண் மற்றும் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்கு கற்பூரம் காட்டி வழிபாடு செய்தனர்.

விழாவின் ஒரு பகுதியாக, பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மேலும், பொறி, கடலை, சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்கள் படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் தமோதரேன், செயலாளர் சுரேஷ், பொருளாளர் பிரகாஷ் ஆகியோருடன் தீபக், உமதேவி, மோகன்ராஜ், மணி, அஸ்வின், அர்ஜுன், கணேஷ், சங்கர், விஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...