திருப்பூர் பனியன் நிறுவனங்களில் விமரிசையாக நடைபெற்ற ஆயுதபூஜை விழா

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழிலாளர்கள் ஏராளமாக பங்கேற்றனர். இயந்திரங்களுக்கு பூஜை செய்யப்பட்டு, வளாகம் அலங்கரிக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழில் நகரமான திருப்பூரில் இந்த விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.



ஆயுதபூஜை நாளன்று, நிறுவனங்களின் வாசல்களில் வண்ணக் கோலமிடப்பட்டது. தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இயந்திரங்களுக்கு விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்தனர். பனியன் கம்பெனி வளாகம் முழுவதும் செவ்வந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. வண்ண காகிதங்கள் மற்றும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. வாழைக்கன்று மற்றும் கரும்புகள் நடப்பட்டன. வாகனங்களும் அலங்கரிக்கப்பட்டன.

தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் பதிவேடுகளை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டு, தொழிலும் தொழிலாளர்களும் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டுதல் செய்யப்பட்டது.

பூஜைக்குப் பிறகு, தொழிலாளர்களுக்கு பொங்கல், சுண்டல், பொறி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...