திருப்பூரில் சிறுவர்கள் சைக்கிள்களுக்கு ஆயுத பூஜை: பெரியவர்களுக்கு இணையாக கொண்டாட்டம்

திருப்பூரில் சிறுவர்கள் தங்கள் சைக்கிள்களுக்கு ஆயுத பூஜை செய்து கொண்டாடினர். பெரியவர்களைப் போலவே சைக்கிள்களை சுத்தம் செய்து, அலங்கரித்து, வழிபாடு செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் சிறுவர்கள் பெரியவர்களுக்கு இணையாக ஆயுத பூஜையை கொண்டாடி உள்ளனர். தமிழகம் முழுவதும் தொழிலுக்கு சிறப்பு செய்யும் ஆயுத பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பெரியவர்கள் தங்கள் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வேலை செய்யும் இடத்தை தூய்மை செய்து, இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் தங்களது வாகனங்களுக்கும் பூஜை செய்து வருகின்றனர்.

இதேபோல், பெரியவர்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் திருப்பூரில் சிறுவர்கள் தங்களது வாகனமான சைக்கிளுக்கு ஆயுத பூஜை செய்துள்ளனர்.



சைக்கிள்களை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பூக்களை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.



பெரியவர்களுக்கு இணையாக சிறுவர்களும் திருப்பூரில் ஆயுத பூஜை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த புதுமையான கொண்டாட்டம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...