கோவை கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூரில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி

கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.



கோவை கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று (அக்டோபர் 11) காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் திடீரென கனமழை பொழிந்தது. இந்த எதிர்பாராத மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பலர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி, மழை நிற்பதற்காக காத்திருந்தனர்.

அதேசமயம், துடியலூர் பேருந்து நிலையம் மற்றும் கரிகடை அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (அக்டோபர் 10) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை மற்றும் மதிய நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. பின்னர் தொடர்ச்சியாக மழை பெய்யத் தொடங்கியது.

இந்த திடீர் மழையால் துடியலூர் பகுதியிலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் மழை நிற்கும் வரை சாலையோரங்களில் காத்திருந்தனர். இந்த எதிர்பாராத மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...