ஆயுத பூஜை: அன்னூர் கருப்பராயர் கோவிலில் வாகனங்களுக்கு சிறப்பு வழிபாடு

அன்னூர் காக்காபாளையம் மேடு உதயமரத்து கருப்பராயர் கோவிலில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வாகன உரிமையாளர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். வாகனங்களுக்கு வாழைமரம் கட்டி, விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்ற காக்காபாளையம் மேடு உதயமரத்து கருப்பராயர் கோவிலில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.



அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் இந்த கோவிலில் பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல தொலைதூரம் பயணிக்கும் கால் டாக்ஸிகள், கனரக வாகனங்களை இங்கு நிறுத்தி ஓட்டுநர்கள் வழிபட்டுச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.



இங்கு வாகனங்களை நிறுத்தி வழிபட்டால் பயணம் எந்தவித தடங்களும் இன்றி சிறப்பாக இருக்கும் என்பது ஓட்டுநர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆயுத பூஜை தினமான இன்று (அக்டோபர் 11) கருப்பராயர் கோவிலில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு வாழைமரம் கட்டியும், விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து வாகன உரிமையாளர்கள் வழிபட்டு வருகின்றனர்.

மேலும், வாகனங்களின் சாவிகளை கருப்பராயர் முன் வைத்து கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர். கருப்பராயருக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...