திருப்பூரில் விஜயதசமி: 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்வு

திருப்பூரில் விஜயதசமியை முன்னிட்டு ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் வித்யாரம்ப நிகழ்வு நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். குழந்தைகளின் நாவில் 'ஓம்' எழுதப்பட்டு, அரிசியில் 'அ' எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 13-ம் ஆண்டு வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்வு நடைபெற்றது.



இந்த நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

நவராத்திரி விழா அக்டோபர் 3ஆம் தேதி துவங்கி, 10-ம் நாளான விஜயதசமி அன்று வித்யாரம்பம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில், குழந்தைகளின் நாவில் தங்கவேல் கொண்டு 'ஓம்' எனும் வார்த்தை எழுதப்பட்டது. மேலும், பச்சரிசியில் 'அ', 'ஆ' என குழந்தைகளின் கை பிடித்து எழுதும் நிகழ்வும் நடைபெற்றது.

விஜயதசமி நாளில் தொடங்கப்படும் எந்தவொரு செயலும் சிறந்த வெற்றி தரும் என்பது நம்பிக்கை. அதன்படி, குழந்தைகளுக்கு கல்வி, கலைகள் போன்றவற்றை இந்நாளில் தொடங்குவது வழக்கம்.



வித்யாரம்பம் நிகழ்வில், குழந்தை தந்தை, தாத்தா அல்லது மாமாவின் மடியில் அமர வைக்கப்பட்டு, அரிசி பரப்பப்பட்ட தட்டில் குழந்தையின் கை பிடித்து 'அ' என்று எழுத கற்றுக் கொடுக்கப்பட்டது.



இந்த வித்யாரம்பம் நிகழ்வில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு குழந்தைகளின் கல்வி வாழ்க்கையின் தொடக்கமாக கருதப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...