உடுமலையில் விஜயதசமி: ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி வழிபாடு

உடுமலை அருகே திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் விஜயதசமி விழாவின் போது, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் குழந்தைகள் நெல்மணிகளில் எழுதி வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர்: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் தங்களது மழலைச் செல்வங்களை நெல்மணிகளில் "ஓம் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்" என எழுத வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

விஜயதசமி அன்று துவங்கப்படும் எந்தக் காரியமும் மிக வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனும் கல்வி கற்கத் தொடங்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினால், அவர்கள் மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம்.



சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன் ஆரத்தி காட்டி, அன்று சில வரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்ற நம்பிக்கையும் உள்ளது.





இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...