மோசமான வானிலையால் துபாய் - கோழிக்கோடு விமானம் கோவையில் அவசர தரையிறக்கம்

துபாயில் இருந்து கோழிக்கோடு செல்லும் 'பிளை துபாய்' விமானம், கோழிக்கோட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


கோவை: துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு இன்று (அக்டோபர் 12) காலை சென்று கொண்டிருந்த 'பிளை துபாய்' நிறுவனத்தின் விமானம், மோசமான வானிலை காரணமாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, விமானம் அரை மணி நேரத்துக்கும் மேலாக காற்றில் சுற்றியது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

விமானம் இன்று அக்டோபர் 12 காலை 7.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. வானிலை சீரடைந்த பின்னர் விமானம் கோழிக்கோடுக்கு புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...