உடுமலை திருப்பதி கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு; தஞ்சாவூர் ஆதீனம் சிறப்பு தரிசனம்

உடுமலை ஸ்ரீ வேங்கடேச பெருமாள் திருப்பதி கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தஞ்சாவூர் ஆதீனம் ஸ்ரீசுவாமிநாத தேசிக சுவாமிகள் சிறப்பு தரிசனம் செய்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருப்பதி கோவிலில் புரட்டாசி மாதம் 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தஞ்சாவூர் ஆதீனம் ஸ்ரீசுவாமிநாத தேசிக சுவாமிகள் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் இக்கோவிலில், இன்று ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு, 16 வகை அபிஷேகங்கள் மற்றும் திருமஞ்சனம் மேற்கொள்ளப்பட்டன. பால், தயிர், பன்னீர், புஷ்பம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் ஆதீனம் முனைவர் ஸ்ரீ சுவாமிநாத தேசிக சுவாமிகள் கோவிலுக்கு வருகை தந்தபோது, கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதீனம், "இன்றைய உலகில் ஆன்மீகம் என்பது இன்றியமையாதது. பெரிய மகான்கள் பிறந்த இந்த தேசத்தில் ஆன்மிகத்துடனே அரசியலும் இருந்து வந்தது. அரசர்களின் அரசவையில் ராஜரிஷிகள் இருந்து நிர்வாகத்தை நடத்தி வந்தனர். ஆன்மீகம் தழைக்க எல்லாவிதமான நலன்களும் கிடைக்கும்" என்று கூறினார்.

இந்நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று வெங்கடேச பெருமாளை வழிபட்டனர். உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு லட்டு, துளசி தீர்த்தம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிடபிள் அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...