பொள்ளாச்சியில் போலீஸ் கண்காணிப்பாளர் தலைமையில் திடீர் சோதனை

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. குட்கா, போதை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. பான் மசாலா, குட்கா, போதை வஸ்துக்கள், லாட்டரி சீட்டுகள் மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காவலர் அறையில், கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகின்றனவா என்றும், காவலர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வருகிறார்களா என்றும் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கோப்புகளை ஆய்வு செய்தார்.



பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குட்கா, பான் மசாலா போன்றவை விற்பனை செய்யப்படுகின்றனவா என போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடை உரிமையாளர்களிடம் அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் கேட்டறியப்பட்டது.

நகராட்சி பகுதியில் வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்துள்ளனரா, அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்பதை போலீசார் சரிபார்த்தனர். ஏடிசி தியேட்டர் பகுதியில் கடைகளின் முன்பு மது அருந்திக் கொண்டிருந்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தி எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த திடீர் சோதனையில் காவல் ஆய்வாளர்கள் ரத்தினகுமார், ராஜேஸ்வரி மற்றும் பல உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த திடீர் ஆய்வு பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...