உடுமலை அருகே ஆண் குழந்தையை கடத்திய பெண் சேலத்தில் கைது

உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் 2 வயது ஆண் குழந்தையை காரில் கடத்திச் சென்ற பெண், சேலத்தில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் ஆண் குழந்தையை காரில் கடத்தி சேலத்திற்கு தப்பியோடிய பெண் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் மங்களாபுரத்தைச் சேர்ந்த அமுதா (30) என்பவர் தனது 2 வயது மகன் நிகில் கேசவனுடன் வேலை தேடி சேலம் மாவட்டத்திற்கு சென்றார். அங்கு கன்னங்குறிச்சியைச் சேர்ந்த அமுதா (39) மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த இந்திராணி (43) என்பவருடன் அறிமுகமானார்.

இந்திராணி, அமுதாவை அழைத்துக் கொண்டு உடுமலை பகுதிக்கு வந்தார். முக்கோணம் அருகே அமுதா இயற்கை உபாதைக்குச் சென்றபோது, இந்திராணி குழந்தையை கடத்திக் கொண்டு சென்றுவிட்டார். அமுதா உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக செயல்பட்ட உடுமலை போலீசார், சேலம் அரசு மருத்துவமனை அருகே இருந்த இந்திராணியை கைது செய்து உடுமலைக்கு அழைத்து வந்தனர். குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இச்சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை கடத்திய இந்திராணியிடம் உடுமலை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...