சென்னையில் திடீர் நெஞ்சுவலியால் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் திடீர் நெஞ்சுவலி காரணமாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Chennai: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் M.K. Stalin, துணை முதல்வர் Udhayanidhi Stalin, தமிழக அரசின் அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் சவுக்கு சங்கர், கடந்த மே மாதம் பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இரண்டாவது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், மற்ற அனைத்து வழக்குகளிலும் அவருக்கு ஜாமின் கிடைத்தது.

கோவை சிறையில் இருந்து விடுதலையான பின்னர், சவுக்கு சங்கர் மீண்டும் அதே வீரியத்துடன் செயல்பட போவதாக அறிவித்தார். அதன்படி, தற்போது ஊடகங்களுக்கும், யூடியூப் சேனல்களுக்கும் அவர் வழக்கம் போல் பேட்டி அளித்து வருகிறார்.

இந்நிலையில், அக்டோபர் 12 அன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் தற்போது வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், அவதூறு வழக்கில் கோவை சிறையில் இருந்த போது, தனது கை போலீசாரால் உடைக்கப்பட்டது என்றும், சிறையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்ததாகவும் சவுக்கு சங்கர் கூறியிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...