கோவையில் தீபாவளி ஷாப்பிங்: கடைக்குள் வருமாறு கட்டாயப்படுத்தினால் வழக்கு பதிவு - காவல்துறை எச்சரிக்கை

கோவை டவுன்ஹால் மற்றும் பெரிய கடை வீதி பகுதியில் தீபாவளி ஷாப்பிங் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தும் கடை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Coimbatore: கோவை டவுன்ஹால் மற்றும் பெரிய கடை வீதி பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள், பேன்ஸி ஸ்டோர்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆடை, நகைகள், பட்டாசு உள்ளிட்டவை வாங்க வருவோர் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சில கடைகள் ஊழியர்களை நியமித்து, சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை தங்கள் கடைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. சில சமயங்களில் வாடிக்கையாளர்களின் கையைப் பிடித்து இழுப்பதால் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், உக்கடம் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வைசியாள் வீதியில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியில் உள்ள துணிக்கடை ஊழியர்கள் அவரை கடைக்கு வருமாறு வற்புறுத்தியதோடு, அவதூறாகவும் பேசியதாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கடை உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணக்குமார் கூறுகையில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழில் போட்டியில் சிலர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். இதனைக் கண்காணிக்க அப்பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடைக்கு வெளியே நின்று யாரையும் அழைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தும் ஊழியர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்படும்," என்று எச்சரித்தார்.

காவல்துறையின் இந்த எச்சரிக்கையை அடுத்து, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. பொதுமக்களும் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...