கோவையில் கனமழை: வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதி

கோவையில் பெய்த கனமழையால் அருணா நகர் பகுதியில் வீடுகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் தேங்கி, மக்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். மாநகராட்சியின் முன்னேற்பாடு குறைவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கோவையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீடுகள் மற்றும் தெருக்களில் மழைநீர் புகுந்து, பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தென் தமிழகம் மற்றும் தென் மேற்கு வங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.



கோவை, நல்லாம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட அருணா நகர் பகுதியில் ஆயிரக் கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மழைக் காலங்களில் அடிக்கடி தண்ணீர் புகுந்து வீடுகள் மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மழைக் காலம் தொடங்கும் முன்பே அப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகளை சரி செய்து மழை நீர் வெளியேற வழி வகை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அவை கவனிக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று (13.10.2024) பெய்த கனமழையில் அப்பகுதியில் புகுந்த மழை நீர் வீடுகள் மற்றும் சாலைகளில் ஆறு போல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...