அன்னூர் அருகே தனியார் லாட்ஜில் ஆன்லைன் விபச்சாரம்: மேலாளர் உள்பட இருவர் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கீரநத்தம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் ஆன்லைன் மூலம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக விடுதி மேலாளர் மற்றும் ஊழியர் கைது செய்யப்பட்டனர்.



Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கீரநத்தம் பகுதியில் இயங்கி வந்த தனியார் தங்கும் விடுதியில் ஆன்லைன் மூலம் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக விடுதி மேலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநத்தம் பகுதியில் 'வோன்டர் பாரடைஸ்' என்ற பெயரில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. இந்த விடுதியில் ஓயோ செயலி மூலம் அறை புக் செய்து வெளியூரிலிருந்து வந்த ஒரு வாடிக்கையாளரிடம், விடுதி மேலாளர் சரோஜ் குமார் மற்றும் ஊழியர் வர்க்கீஸ் ஆகியோர் ஆன்லைன் மூலம் பெண்களை புக் செய்து தருவதாகக் கூறி, விபச்சாரத்திற்கு தூண்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விடுதி மேலாளர் சரோஜ் குமார் மற்றும் ஊழியர் வர்கீஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், குறிப்பிட்ட விடுதிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சீல் வைக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஐ.டி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள் அதிகம் உள்ள சரவணம்பட்டி, கீரநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விபச்சாரம் அதிக அளவில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...