அன்னூர் அருகே அறுந்த மின் கம்பி: பொதுமக்கள் புகார் மீது மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்

அன்னூர் அருகே ஒன்னக்கரசம்பாளையம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், அவர்கள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கரியாம்பாளையம் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியான ஒன்னக்கரசம்பாளையத்தில், சாலையூர் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு மின்வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில், மின் வழித்தடத்தில் உள்ள ஒரு கம்பி 90 சதவீதம் அறுந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், அந்த பகுதி மக்கள் பொகலூர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், மின்வாரிய அதிகாரிகளோ இதனை பொருட்படுத்தாமல், அந்த மின் கம்பி அறுந்துள்ள இடத்தில் உள்ள விவசாய தோட்ட உரிமையாளரே தனது சொந்த செலவில் சரி செய்து கொள்ள வேண்டும் என கூறியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், அரசுத்துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய சூழலில், மின்வாரிய அதிகாரிகளின் இந்த அலட்சியம் மனித உயிர்களை பறிக்கும் முன் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த ஊர் மக்கள் வெளியிட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துணை முதல்வர் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக கூறும் நிலையில், மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...