மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற இளைஞரை பாலியல் தொழில் இடத்திற்கு அழைத்துச் சென்ற மூவர் கைது

மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற 30 வயது இளைஞரை பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற இளைஞரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமுகை ஆலங்கொம்பு பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் நேற்று கோவைக்குச் சென்று திரும்பி வந்தார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், தொடர் மழை காரணமாக ஆட்டோவில் வீடு செல்ல முடிவு செய்தார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் சஞ்சீவ்காந்தி (33) என்பவர், இளைஞரை மேட்டுப்பாளையம் சாந்தி நகர் பகுதியில் உள்ள இரண்டு பெண்களிடம் அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற இளைஞரிடம் இரண்டு பெண்களும் தகாத முறையில் நடந்து கொண்டனர். உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிய இளைஞர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காரமடை பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண், திம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சஞ்சீவ்காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட 39 வயது பெண்ணை கோவை மாவட்ட பெண்கள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மற்ற இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆட்டோவில் ஏற வந்த பயணியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்ற இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...