திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மழைக்கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி: தீயணைப்பு வீரர்கள் அசத்தல்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு வீரர்கள் பல்வேறு பாதுகாப்பு முறைகளை விளக்கினர்.


Coimbatore: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழைக்கால பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் தீயணைப்பு துறை சார்பில் பருவமழை பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.



மாவட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் பங்கேற்றனர். மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்தால் வீடுகளில் உள்ள பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து விளக்கமளித்து காண்பித்தனர்.

மேலும், நீரில் மூழ்கியவரை எவ்வாறு காப்பாற்ற வேண்டும், விபத்து நேரங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விரிவான விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் உதவி அலுவலர்கள் இளஞ்செழியன், வீரராஜ் மற்றும் நிலை அலுவலர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...